திங்கள், ஜூலை 4

கலைமுகம் 51 வது புதிய இதழ்


ஈழத்துச் சிற்றிதழ்ச் சூழலில் கவனத்திற்குரிய இதழாக வளர்ந்து வரும் 'கலைமுகம்' புதிய இதழ் 51 (ஏப்ரல்-யூன்) வெளிவந்துள்ளது.

இவ்விதழில் பெண்ணியா, யோகி, ந.மயூரரூபன், வேலணையூர் தாஸ், மீனாள் செல்வன், பஹீமாஜஹான், ந.சத்தியபாலன், துவாரகன், வே.ஐ.வரதராஜன், கு.றஜீபன், த.ஜெயசீலன், சித்தாந்தன் ஆகியோரின் கவிதைகள் உள்ளன.

கட்டுரைகளில் ‘எண்பதுகளில் புகலிடப் புனைகதைகள்- பார்த்திபனின் படைப்புக்களை மையமாகக் கொண்ட பார்வை’ என்ற கட்டுரையை சு.குணேஸ்வரனும், ‘ஆகாயப் பூக்கள் கிளரும் நினைவுகள்’ என்ற கட்டுரையை அ. யேசுராசாவும், இளம் ஓவியர் வாசனின் ‘கருவாடு காண்பியக் கலைக்காட்சி’ பற்றி பப்சி மரியதாசனும், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’ பற்றி குப்பிழான் ஐ.சண்முகனும், ‘தமிழ்ப்பாட நூல்களில் பேச்சுத்தமிழ்’ என்ற கட்டுரையை சிறீநதிபரன் ஆகியோரும் எழுதியுள்ளனர்.

சிறுகதைகளை தாட்சாயணி, யோ.கர்ணன், ரிஷான் ஷெரீப், அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மொழிபெயர்ப்புக் கட்டுரையாக: தலைசிறந்த நவீன நாடகாசிரியர்களில் ஒருவரான விஜய் ரெண்டுல்கார் பற்றி ஜி.ரி. கேதாரநாதனும், சீனா உதயகுமாரின் ‘செந்நீரும் கண்ணீரும்’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய மதிப்பீட்டினை தாட்சாயணியும், ‘சோலைக்கிளியின் கவிதைமொழி’ என்ற தொடரை செளஜன்யஷாகரும் எழுதியுள்ளனர்.

கிரியாவில் பிரெய்லி தமிழ் அகராதி வாழ்வகத்திற்கு கையளித்தமை பற்றிய விபரத்தை மாதங்கன் எழுதியுள்ளார்.

மற்றும்… மிக நீண்ட ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைக்கும் வாசகர் கடிதங்களுடன் வழமையான அம்சங்களைகளையும் இணைத்து இதழ் கனதியாக வெளிவந்துள்ளது.


2 கருத்துகள்:

  1. விடயங்கள் நன்றாக இருந்தாலும் குறித்த கால ஒழுங்கில் வெளியாகாததால் எனக்கு இப்போது ' கலைமுகத்தில்' ஆர்வம் குன்றியுள்ளது.
    தனி மனிதமுயற்சியினால் வெளியாகும் மல்லிகை, ஞானம், ஜீவநதி, நீங்களும் எழுதலாம் ............ என்பன ஒழுங்கு தவறாது வெளியாகும் போது
    நிறுவனம் ஒன்றால் வெளியிடப் படும் இதழின் கால ஒழுங்கு தப்புவதற்கு காரணம் யாது ? ஒழுங்கு இருந்தால் தான் அது வாசகரிடம் எடுபடும். மரியா சேவியர் அடிகளார் இதை கவனிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்தை கலைமுகம் பொறுப்பாசிரியருக்கு தெரியப்படுத்துகிறேன். நன்றி தாரணி.

    பதிலளிநீக்கு