வியாழன், ஜூலை 28

கவிஞர் தீபச்செல்வனுக்கு இரண்டு விருதுகள்





1.சிறந்த புகைப்பட ஊடகவியலாளன் விருது

2.நெருக்கடி சூழலில் செய்தி தேடலுக்கான விருது

கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பத்தி, ஊடக எழுத்து, ஒளிப்படம், என பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர் தீபச்செல்வனுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இரண்டு விருதுகளை வழங்கிக் கெளரவித்துள்ளது.

நெருக்கடிக் காலத்தில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பான அவரது கட்டுரைகள் முக்கியமானவை. ஈழத்து ஊடகங்களிலும், தமிழக சஞ்சிகைகளிலும், அவரது பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இணையத்தில் மிக பரவலாக அவரது படைப்புக்களை, ஊடக எழுத்துக்களை வாசிக்க முடியும்.

2000 ற்குப் பின்னரான ஈழத்துக் கவிதைப் பரப்பில் தவிர்க்கமுடியாத இளங்கவிஞராகத் திகழ்ந்து வரும் தீபச்செல்வனின் பணிகள் தொடரவேண்டும்.

தீபச்செல்வனுக்கு ‘வல்லைவெளி’ வலைப்பதிவின் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
- துவாரகன்

விருது தொடர்பான மேலதிக தகவல்களை இந்த இணைப்பினூ
டாக வாசிக்கலாம்.

4 கருத்துகள்:

  1. முயற்சி திருவினையாக்கும்!.....தீபச்செல்வனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    உரித்தாகட்டும்.இப்பகிர்வை அளித்த உங்களுக்கும் எனது நன்றிகள் சகோ.

    பதிலளிநீக்கு
  2. 6:10 AM (1 hour ago)
    செய்திக்கு நன்றி, குணேஸ்வரன்.
    தீபச்செல்வனுக்கு எனது வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.

    அன்புடன்,
    க. நவம்

    பதிலளிநீக்கு
  3. நண்பர் தீபச்செல்வனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    பதிலளிநீக்கு
  4. அம்பாளடியாள், க.நவம், மேமன்கவி ஆகியோரின் வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு