வியாழன், டிசம்பர் 19

செல்லத்துரை சுதர்சனுக்கு அன்பு வாழ்த்துக்கள்


நண்பர் செல்லத்துரை சுதர்சன் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் விரிவுரையாளராக அண்மையில் பதவிபெற்றிருக்கிறார். கவிதை கட்டுரை விமர்சனம் ஆய்வு ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு செயற்பட்டு வருபவர்.

பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி முன்னேறியிருக்கும் நண்பருக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், டிசம்பர் 16

பெரியவர்களுக்கு வாழ்த்து


15.12.2013 இல் கொழும்பில் நடைபெற்ற கலாபூஷணம் விருது விழாவில் நான் மதிக்கும் பெரியவர்கள் சி. செசகராசசிங்கம், நந்தினி சேவியர், குப்பிழான் ஐ. சண்முகன், சி.சிவநேசன், கண எதிர்வீரசிங்கம் ஆகியோர் கலாபூஷணம் விருது பெற்றனர். விருதுபெற்ற பெரியவர்களுக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். (படங்கள் நன்றி - வதிரி சி. ரவீந்திரன், குமாரராசன்)

 சி. செசகராசசிங்கம் கலாபூஷணம் விருதுபெற்றபோது


கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம், 
மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் 
இருவரும் கலாபூஷணம் விருதுபெற்றபின்னர். எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் மண்டபத்தில்  


அடங்காப்பிடாரி நாடகத்தின் மூலம் நன்கு அறியப்பட்ட சி. சிவநேசன் கலாபூஷணம் விருதுபெற்றபோது


 கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம் கலாபூஷணம் விருதுபெற்றபோது