வெள்ளி, பிப்ரவரி 17

காயப்பகிர்வு




-ஆறாவடு நாவலை முன்வைத்து சில பகிர்வுகள்
இடம்-கவிஞர் சத்தியபாலன் இல்லம், 21, இராஜவீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
காலம்- 18.02.2012(சனிக்கிழமை)
நேரம்- மாலை 3 மணி
கலந்துகொள்வோர்
---------------------------
நிலாந்தன்
தபின்
சி.ரமேஷ்
இயல்வாணன்
யாத்திரிகன்
தானாவிஷ்ணு
சத்தியபாலன்
கருணாகரன்
யோ.கர்ணன்
தூண்டி செல்வமனோகரன்
பா.துவாரகன்
கவிஞர் துவாரகன்
துவாரகன்
மாதங்கி
அஜந்தகுமார்
பா.அகிலன்

வெள்ளி, பிப்ரவரி 3

புதிய நூலகம் 9,10 செய்தி மடல்கள் வெளிவந்துள்ளன


.
புதிய நூலகத்தின் 9 வது மற்றும் 10 வது செய்திமடல்கள் சிறிய இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்துள்ளன.

9 வது இதழில் ‘சிறப்புச் சேகரங்கள் வலைவாசல்கள்’ என்ற செய்தியுடன்; இராகவன் எழுதிய ‘புதிய தரிசனம் ஒரு நினைவோடை’, தீபச்செல்வன் எழுதிய ‘வன்னியில் அழிந்த நூல்கள்’, நற்கீரன் எழுதிய ‘தமிழில் திறந்த தரவுகள் ஏன் எப்படி’ ஆகிய கட்டுரைகளும்; கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயம், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்ற ‘எண்ணிம நூலக அறிமுகம்’ பற்றிய சி.சேரனின் நிகழ்வுக்குறிப்புக்களும், அ.யேசுராசா பற்றிய பதிவும் இடம்பெற்றுள்ளன.
http://noolahamfoundation.net/ebooks/publishers/noolahamfoundation/puthiyanoolaham2011.10.15.pdf

புதிய நூலகத்தின் 10 வது செய்திமடலில் ‘பத்தாயிரம் ஆவணங்கள் பல்லாயிரம் வாசகர்கள்’ என்ற செய்தியுடன்; பிரதீபா கனகா தில்லைநாதன் எழுதிய ‘மொழிசார் உலகு - கூட்டு வேலைகளது தேவை’ என்ற கட்டுரையும், ‘தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும்’ என்ற சி. கணேசமூர்த்தியின் நூலுக்கு பூ. நகுலன் எழுதிய நூல் அறிமுகமும், மறைந்த ‘மாவை வரோதயன் ’பற்றிய குறிப்பும், நற்கீரனின் ‘எழுதப்படாத அறிவு’ என்ற தகவற்குறிப்பும் இடம்பெற்றுள்ளன.
http://noolahamfoundation.net/ebooks/publishers/noolahamfoundation/puthiyanoolaham2011.12.15.pdf

நூலக இணையத்தளத்திலிருந்து இலவசமாகவே pdf கோவையாக பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம்.


-சு.குணேஸ்வரன்