வெள்ளி, செப்டம்பர் 11

வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற நந்தினி சேவியர் அவர்களை வாழ்த்துகின்றோம்





17 வது கொடகே தேசிய சாகித்திய விருதுவிழாவில் தமிழ்மொழி மூலம் எழுதிய படைப்பாளிகளில் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த எழுத்தாளர் நந்தினிசேவியர் அவர்களுக்கு இம்முறை கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வு (10.09.2015) கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. கொடகே நிறுவனர் தேசபந்து சிரிசுமன கொடகே அவர்கள் விருதினை வழங்கிக் கௌரவித்தார். நந்தினி சேவியர் கலை இலக்கியத்துறையில் நீண்டகாலமாக பங்களித்து வருபவர். அவரின் படைப்புக்களை ஒன்று சேர்த்து (அவர் எழுதியவற்றில் தொலைத்துவிட்ட குறுநாவல்கள், சிறுகதைகள் தவிர்ந்த) அண்மையில் விடியல் பதிப்பகம் “நந்தினி சேவியர் படைப்புகள்” என்ற காத்திரமான தொகுப்பினையும் வெளியிட்டிருந்தது. நந்தினி சேவியர் அவர்கள் தொடர்ந்தும் தமது எழுத்துலக அனுபவங்களை மேலும் முழுமூச்சுடன் தமிழ் இலக்கிய உலகிற்கு தருவதற்கு இந்த விருது ஒர் உந்துதலாக அமையவேண்டும்.


வெள்ளி, ஜூன் 26

திருமறைக்கலாமன்றம் கலைப்பணியில் 50 ஆண்டுகள்




தமிழ்விழா


முதலாம் நாள் நிகழ்வுகள்

திருமறைக் கலாமன்றம், கலைத்தூது கலையகம், இல 286, பிரதான வீதி, யாழ்ப்பாணம்


ஆய்வரங்கு

நாவல் அரங்கு
26.06.2015 வெள்ளிக்கிழமை, காலை 8.45- 12.30


தலைமை: பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா

1. ‘எடுத்துரைப்பியல் நோக்கில் ஈழத்து தமிழ் நாவல்கள்’ - பேராசிரியர் செ.யோகராசா

2. ‘ஈழத்து நாவல்களில் சமூக மாற்றம்’ - திரு.ஈ.குமரன்

3. ‘புலம்பெயர் நாவல்களின் நுண் அரசியலும், புதிய சாத்தியப்பாடுகளும் - திரு.சு.குணேஸ்வரன்

4. ‘படைப்பு மனமும் அனுபவ வெளிப்பாடும்’ - திரு.ச.ஆ.உதயன்



அரங்கு : பண்பாடு, ஊடகம், இணையம்
26.06.2015 வெள்ளிக்கிழமை 1.45 - 4.30

தலைமை : திரு.ம.நிலாந்தன்

1. ‘அறிவுருவாக்கப் பண்பாட்டுத் தளத்தில் தமிழ் இணையம்’ - திரு.கெ.சர்வேஸ்வரன்

2. ‘ஈழத்து அச்சு ஊடக வெளியில் சமகாலத் தமிழ் இலக்கியம் - திரு.கருணாகரன்

3. ‘சமகால ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் காண்பியக் கலைகள் - திருமதி. பப்சி மரியதாசன்

4. ‘ஈழத்தில் தமிழ்த் திரைப்பட இரசனை’ திரு.ச.இராகவன்

• கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இல. 238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் நடைபெறவுள்ளன.

பிரதம விருந்தினர் :
திரு த. குருகுலராஜா,
கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர், வடக்கு மாகாணம்.

சிறப்புரை :
திரு ச. லலீசன்,
உப அதிபர்,
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை.

கலை நிகழ்வுகளாக திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் நடன ஆசிரியை திருமதி. அகல்யா ராஜபாரதியின் மாணவிகள் வழங்கும் நடனங்களும், செல்வி எஸ்.பிரபாலினி குழுவினர் வழங்கும் இசைக் கச்சேரியும் , திருமறைக் கலாமன்றம் வழங்கும் ‘மன விகாரம்’ நவீன நாடகமும் இடம்பெறும்



திருமறைக் கலாமன்றம் - "தமிழ் விழா"

இரண்டாம்நாள் நிகழ்வுகள் 

திருமறைக் கலாமன்றம், கலைத்தூது கலையகம், இல 286, பிரதான வீதி, யாழ்ப்பாணம்

ஆய்வரங்கு
அரங்கு : சிறுகதை
27.06.2015 சனிக்கிழமை, காலை 8.45- 12.30
தொடக்கவுரை : திருமதி கோகிலா மகேந்திரன்
தலைமை : ஐ. சாந்தன்
ஆய்வுரைகள்
1. ‘படைப்பிலக்கிய நோக்கில் ஈழத்துச் சிறுகதைகள்’ - குப்பிழான் ஐ.சண்முகன்
2. ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை - கருத்துநிலையும் , புதிய வரைபுகளும்’ - திசேரா
3. ‘இனவரையியல் நோக்கில் தமிழ்ச் சிறுகதைகள்’ - திரு.த.அஜந்தகுமார்
4. ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் பண்பாட்டு அடையாளமும் இருப்பியலும்’ - திரு.இ.இராஜேஸ்கண்ணன்
-------------
அரங்கு : விமர்சனம், மலையக இலக்கியம்
27.06.2015 சனிக்கிழமை, பகல் 1.30
தலைமை : திரு.தெ.மதுசூதனன்
ஆய்வுரைகள்
1. ‘ஈழத்து நவீன இலக்கிய விமர்சனமும் , கலாரசனையும் - திரு.தி.செல்வமனோகரன்
2. ‘கிழக்கிலங்கையின் விமர்சன வளர்ச்சி’ - திரு.அப்துல் றஷாக்
3. ‘மலையகத்தின் சமகால நவீன இலக்கிய செல்நெறி’ - திரு.சு.தவச்செல்வன்
4. ‘மலையக இலக்கியத்தில் பண்பாட்டுக் கலைகள் - திரு. பொன்.பிரபாகரன்

மாலை நிகழ்ச்சிகள்
கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இல. 238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் நடைபெறவுள்ளன.
தலைமை : திரு ம. யேசுதாசன் (பொறுப்பாளர், இசைப்பிரிவு, திருமறைக்கலாமன்றம்)
பிரதம விருந்தினர் :
திரு நா. வேதநாயகன்
அரசாங்க அதிபர்,
யாழ் மாவட்டம்
சிறப்புரை :
அருள்பணி தமிழ்நேசன் அடிகள்
இயக்குநர், ‘கலையருவி’ சமூகத் தொடர்பு அருட்பணி மையம்,
மன்னார் மறைமாவட்டம்.
கவியரங்கம் – ஊருக்கு நல்லது சொல்வேன்
தலைமை : கவிஞர் சோ.பத்மநாதன்
பங்கேற்போர்
1. திரு இ.சு முரளிதரன்
2. திரு நாக சிவசிதம்பரம்
3. திரு த. ஜெயசீலன்
4. திரு கு. றஜீபன்
ஓம்கார தெய்வீக ஆராதனை மற்றும் திருமறைக் கலாமன்றம் வழங்கும் ‘குசேலர் இசை நாடகமும் இடம்பெறும்.



மூன்றாம் நாள் நிகழ்வுகள்

திருமறைக் கலாமன்றம், கலைத்தூது கலையகம், இல 286, பிரதான வீதி, யாழ்ப்பாணம்
ஆய்வரங்கு
அரங்கு : கவிதை
28.06.2015 ஞாயிற்றுக்கிழமை,  காலை 8.45- 12.30
தலைமை : சோ. பத்மநாதன்
தொடக்கவுரை : ந. சத்தியபாலன்
ஆய்வுரைகள் 

1.    ‘ஈழத்து தமிழ்க் கவிதைகளில் முஸ்லிம்களின் இருப்பும் ,எதிர்ப்பரசியலும்’  - திரு.சிராஜ் மஷ்ஹர்
2.     ‘சமூகப் பண்பாட்டு அசைவியக்கமும் , ஈழத்துப் பெண்களின் கவிதைகளும்’ - திரு.சி,ரமேஸ்
3.    ‘ஈழத்து நவீன கவிதை-படைப்பு நிலையும் , வெளிப்பாடும்’ - திரு.சித்தாந்தன்
4.    ‘ஈழத்தில் தமிழில் நிகழ்ந்துள்ள மொழிபெயர்ப்புக் கவிதைகளின்அரசியல்’ - திரு.வேல்நந்தகுமார்

அரங்கு -  நாடகம்
28.06.2015 ஞாயிற்றுக்கிழமை, பகல் 1.30
தலைமை : கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் 
ஆய்வுரைகள்
1.     ‘மரபுவழி நாடகங்களின் இருப்பும் , இயங்குநிலையும் - கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன்
2.    ‘திருமறைக் கலாமன்றத்தின் அரங்கச் செயற்பாடுகள் - ஒரு பார்வை’ -   திரு பா.இரகுவரன்
3.     ‘யுத்தத்துக்குப் பின்னான அரங்கப்போக்குகள்’ - கலாநிதி சி.ஜெயசங்கர்
4.    ‘கற்கை நெறியாக அரங்கு எதிர்கொள்ளும் சவால்கள் -  திரு.செ.செல்வகுமார்


மூன்றாம் நாள் மாலை நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக யாழ் இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீமான் ஆ.நடராஜன் கலந்து சிறப்பிப்பதுடன், சிறப்புரையை கலாநிதி தமிழ்மணி அகளங்கன் வழங்குவார். கலை நிகழ்வுகளாக திருமறைக் கலாமன்ற இளங்கலைஞர்கள் வழங்கும் ஒயிலாட்டமும் , கலைவாணர் வில்லிசைக் குழுவினர் வழங்கும் ‘சிலம்பு சிரித்தது’ என்னும் வில்லிசையும், திருமறைக் கலாமன்ற கலைஞர்கள் வழங்கும் ‘கம்பன் மகன்’ தென்மோடி நாட்டுக்கூத்தும் இடம்பெறும்.

புதன், மார்ச் 25

கவிஞர் சோ. ப மொழிபெயர்த்த Sri Lankan Tamil Poetry


   கவிஞர் சோ. ப அவர்கள் மொழிபெயர்த்த ஈழக்கவிஞர்களின் கவிதைகள் உள்ளடங்கிய Sri Lankan Tamil Poetry – An Anthology என்ற (தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட) தொகுப்பு வெளிவந்துள்ளது.

    இத்தொகுப்பில் சில்லையூர் செல்வராசன், சேரன், மஹாகவி, தா. இராமலிங்கம், எம்.ஏ நுஃமான், செழியன், கரோலின், திருமாவளவன், தானா விஷ்ணு, த. அஜந்தகுமார், த. ஜெயசீலன், துவாரகன், சோ.ப, றஷ்மி, ஆர். முரளீஸ்வரன், காஸ்ரோ, அஷ்வகோஸ், வேலணையூர் தாஸ், ஒட்டமாவடி அறபாத், அஷ்ரப் சிஹாப்டீன், முல்லை முஸ்ரிபா, சங்கரி, அவ்வை, மனோகரி, சோலைக்கிளி, சர்மிளா செய்யித், சடகோபன், பா. அகிலன், கருணாகரன், கு. றஜீபன், இ.சு முரளிதரன், கி.பி அரவிந்தன் ஆகியோரின் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் உள்ளன. தொகுப்பில் 67 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன.

     யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் 25.03.2015 மாலை 3.00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி கவிதை நூல் வெளியிடப்பட்டது. நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.













ஒளிப்படங்கள் _ சு. குணேஸ்வரன்