சனி, அக்டோபர் 27

நிதுனின் "துயரக்கடல்" கவிதைத் தொகுப்புக்கு இரண்டு விருதுகள்



 இளங்கவிஞர் முல்லைத்தீவு கீ. பி நிதுன் எழுதிய "துயரக்கடல்" என்ற கவிதைத் தொகுப்புக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

2011 ஆண்டு வெளிவந்த சிறந்த கவிதை நூல்களில் ஒன்றாக "துயரக்கடல்" தொகுப்பு தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை இலக்கியப்பேரவை விருதும் யாழ் இலக்கிய வட்டத்தின் ஊடாக வழங்கப்படும் கவிஞர் ஐயாத்துரை விருதும் கிடைத்துள்ளது.

இளங்கவி கீ. பி நிதுனுக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-துவாரகன்

தொடர்புடைய பதிவுகள்  -
http://ayalveedu.blogspot.com/2011/07/blog-post_14.html
http://www.thinakkathir.com/?p=14414

புதன், அக்டோபர் 3

நந்தினி சேவியரின் நெல்லிமரப் பள்ளிக்கூடம்


 நந்தினி சேவியரின் "நெல்லிமரப் பள்ளிக்கூடம்" சிறுகதைத் தொகுப்புக்கு அரச தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.

மேற்படி விருது வழங்கும் வைபவம் 30.09.2012 அன்று வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நூலுக்கு கெடகே விருதும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கலை இலக்கியத் துறையில் பல்வேறு பணிகளில் தளர்ந்த வயதிலும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நந்தினி சேவியர் ஐயாவுக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 விருதுபெற்ற படைப்பாளிகள் விபரம் _ 

01. சிறந்த நாவல் - சொடுதா - எஸ்..உதயன்

02. சிறந்த நிறுகதைத் தொகுதிகள்

    வெள்ளி விரல் - ஆர். எம்.நௌஷாத்
    நெல்லிமரத்துப் பள்ளிக்கூடம் - நந்தினி சேவியர்

03. காவியம் -தோட்டுப்பாய் மூத்தம்மா - பாலமுனை பாரூக்

04. கவிதை -நிலம் பிரிந்தவனின் கவிதை - சுஜந்தன்

05. சிறந்த ஆய்வு -இந்துக் கணித வானியல் மரபு - .முகுந்தன்

06. சிறந்த நாடக நூல் -கருவறையில் இருந்து - கந்தையா ஸ்ரீகந்தவேள்

07. சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் - அம்மாவின் ரகசியம் - எம்.ரிஷான் ஷரீப்

08. சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை - ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள் - அஷ்ரஃப் சிஹாப்தீன்

09. சிறந்த மொழிபெயர்ப்பு (இளையோர் இலக்கியம்) -காட்டுப்புற வீரர்கள்- திக்குவ்லைக் கமால்

10. சிறந்த மொழிபெயர்ப்பு (நானாவிதம்) - பர்மிய பிக்கு சொன்ன கதைகள் - சோ.பத்மநாதன்



விருது நிகழ்வுப் படங்கள் சிலவற்றைத் தருகிறேன்.
 (படங்கள் நன்றி - நந்தினி சேவியர், அஷ்ரப் சிஹாப்தீன்)


  வசந்த ஏக்கநாயக்கா, டி.பி ஏக்கநாயக்கா, பேராசிரியர் காலோ பொன்சேகா, விஜித் கனுகல ஆகியோருடன் விருதுபெறும் நந்தினி சேவியர்.


 அஷ்ரப் சிஹாப்தீனுடன் நந்தினி சேவியர் 

சாகித்திய விருதுபெற்ற படைப்பாளிகளுடன் நந்தினி சேவியர் 



கிழக்கு மாகாண இலக்கிய விழா - 2012