வியாழன், டிசம்பர் 19

செல்லத்துரை சுதர்சனுக்கு அன்பு வாழ்த்துக்கள்


நண்பர் செல்லத்துரை சுதர்சன் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் விரிவுரையாளராக அண்மையில் பதவிபெற்றிருக்கிறார். கவிதை கட்டுரை விமர்சனம் ஆய்வு ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு செயற்பட்டு வருபவர்.

பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி முன்னேறியிருக்கும் நண்பருக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், டிசம்பர் 16

பெரியவர்களுக்கு வாழ்த்து


15.12.2013 இல் கொழும்பில் நடைபெற்ற கலாபூஷணம் விருது விழாவில் நான் மதிக்கும் பெரியவர்கள் சி. செசகராசசிங்கம், நந்தினி சேவியர், குப்பிழான் ஐ. சண்முகன், சி.சிவநேசன், கண எதிர்வீரசிங்கம் ஆகியோர் கலாபூஷணம் விருது பெற்றனர். விருதுபெற்ற பெரியவர்களுக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். (படங்கள் நன்றி - வதிரி சி. ரவீந்திரன், குமாரராசன்)

 சி. செசகராசசிங்கம் கலாபூஷணம் விருதுபெற்றபோது


கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம், 
மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் 
இருவரும் கலாபூஷணம் விருதுபெற்றபின்னர். எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் மண்டபத்தில்  


அடங்காப்பிடாரி நாடகத்தின் மூலம் நன்கு அறியப்பட்ட சி. சிவநேசன் கலாபூஷணம் விருதுபெற்றபோது


 கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம் கலாபூஷணம் விருதுபெற்றபோது

புதன், அக்டோபர் 2

சாகித்திய ரத்னா விருது பெற்ற மூத்த எழுத்தாளர் தெணியான்30.09.2013 இல் BMICH இல் நடைபெற்ற விருதுவழங்கல் நிகழ்வில் 'சாகித்திய ரத்னா' விருதினை மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்கள் பெற்றுக் கொண்டார்.  அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- சு. குணேஸ்வரன் 

சனி, ஏப்ரல் 6

ஒரு பாதையின் கதை - குப்பிழான் ஐ. சண்முகன்குப்பிழான் ஐ. சண்முகனின் தேர்ந்த கதைகளின் தொகுதியாக "ஒரு பாதையின் கதை" நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய இணைப்பு

(1)
வாசிப்பு: ஒரு பாதையின் கதை
குப்பிழான் ஐ. சண்முகம் - போருக்கு முந்தைய வாழ்க்கை

நித்ய ஸந்யாஸ்

http://www.kalachuvadu.com/இதழ் 160

(2) /இளமைக்கேயுள்ள உள்ளக் கிளர்ச்சியையும், உணர்வுக் கொந்தளிப்பையும் கருப்பொருளாகக் கொண்ட சண்முகனின் கதைகள் ஏக்க உணர்வை கிளர்த்தும்படியாக அமைந்துவிட்டிருப்பவை இக்கதைகள்.