சனி, மார்ச் 5

‘மறுமலர்ச்சி’ வெளியீட்டுவிழா



ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை நூலக நிறுவன இயக்குநர் சேரன் சிவானந்தமூர்த்தியும், வெளியீட்டுரையை கோப்பாய் சிவமும், அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும், ஆய்வுரையை பேராசிரியர் துரை மனோகரனும் நிகழ்த்துவர். ஏற்புரையை செல்லத்துரை சுதர்சன் நிகழ்த்துவார். நூலின் முதற்பிரதியை தொழிலதிபர் எஸ்.பி நாகரத்தினமும் இணைப்பிரதிகளை யாழ்ப்பாணம் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் பிரம்மஶ்ரீ க. இலட்சுமணசர்மாவும் பருத்தித்துறை பிரதேச செயலர் த. ஜெயசீலனும் யாழ் பொதுநூலக பிரதம நூலகர் திருமதி சுகந்தி சதாசிவமூர்த்தியும் பெற்றுக்கொள்வர். 1946 முதல் 1948 வரை வெளிவந்த 23 மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பாக அமையும் இந்நூல் கலை இலக்கிய வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது.