வெள்ளி, செப்டம்பர் 11

வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற நந்தினி சேவியர் அவர்களை வாழ்த்துகின்றோம்

17 வது கொடகே தேசிய சாகித்திய விருதுவிழாவில் தமிழ்மொழி மூலம் எழுதிய படைப்பாளிகளில் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த எழுத்தாளர் நந்தினிசேவியர் அவர்களுக்கு இம்முறை கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வு (10.09.2015) கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. கொடகே நிறுவனர் தேசபந்து சிரிசுமன கொடகே அவர்கள் விருதினை வழங்கிக் கௌரவித்தார். நந்தினி சேவியர் கலை இலக்கியத்துறையில் நீண்டகாலமாக பங்களித்து வருபவர். அவரின் படைப்புக்களை ஒன்று சேர்த்து (அவர் எழுதியவற்றில் தொலைத்துவிட்ட குறுநாவல்கள், சிறுகதைகள் தவிர்ந்த) அண்மையில் விடியல் பதிப்பகம் “நந்தினி சேவியர் படைப்புகள்” என்ற காத்திரமான தொகுப்பினையும் வெளியிட்டிருந்தது. நந்தினி சேவியர் அவர்கள் தொடர்ந்தும் தமது எழுத்துலக அனுபவங்களை மேலும் முழுமூச்சுடன் தமிழ் இலக்கிய உலகிற்கு தருவதற்கு இந்த விருது ஒர் உந்துதலாக அமையவேண்டும்.