சனி, மார்ச் 1

சு. குணேஸ்வரனின் “உள்ளும் வெளியும்” நூல் வெளியீடு - அழைப்பிதழ்


உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் சு. குணேஸ்வரனின் “உள்ளும் வெளியும்” என்ற ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 02.03.2014 ஞாயிறு காலை 9.00 மணிக்கு தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் குப்பிழான் ஐ. சண்முகன் தலைமையில் இடம்பெறவுள்ளது.






புதன், ஜனவரி 1

உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும் மானுடபாகமும் நூல் வெளியீடு





 புலவர்மணி கா. நீலகண்டன், செல்லத்துரை சுதர்சன் ஆகியோரைப் பதிப்பாளர்களாகக் கொண்டு வெளிவரும் “உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு” நூலின் வெளியீட்டு விழா 05.01.2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் வல்வை ந. அனந்தராஜ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

 நிகழ்வில் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, பேராசிரியர் கி. விசாகரூபன், பேராசிரியர். வ. மகேஸ்வரன் , பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் பூ. சோதிநாதன், அதிபர் சு. கிருஸ்ணகுமார், ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி இ. தில்லையம்பலம் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

 நிகழ்வில்; வைத்திய கலாநிதி ந. குகதாசன், பேராசிரியர் சி. சிறீசற்குணராசா, வைத்திய கலாநிதி பானு பிரசன்னா, விரிவுரையாளர் ந. சஞ்ஞீவன், பொறியியலாளர் நீ. நித்தியானந்தன், சிவப்பிரம்மசிறீ வைத்தியநாதக்குருக்கள், திருமதி தாரணி செல்வனேசன், யாழ் பிரதம நூலகர் திருமதி இமெல்டா கருணாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

 19 ஆம் நூற்றாண்டில் ஈழத்தின் பெரும்புலவராகத் திகழ்ந்த உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் படைப்புக்களைக் கொண்ட பெருந்திரட்டாக வெளியிடப்படும் இந்நிகழ்வு வடமராட்சிப் புலமைப் பாரம்பரியத்தின் பெருமையை அறிவதற்கு ஒரு ஆவணமாகத் திகழ்கின்றது.


வியாழன், டிசம்பர் 19

செல்லத்துரை சுதர்சனுக்கு அன்பு வாழ்த்துக்கள்


நண்பர் செல்லத்துரை சுதர்சன் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் விரிவுரையாளராக அண்மையில் பதவிபெற்றிருக்கிறார். கவிதை கட்டுரை விமர்சனம் ஆய்வு ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு செயற்பட்டு வருபவர்.

பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி முன்னேறியிருக்கும் நண்பருக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், டிசம்பர் 16

பெரியவர்களுக்கு வாழ்த்து


15.12.2013 இல் கொழும்பில் நடைபெற்ற கலாபூஷணம் விருது விழாவில் நான் மதிக்கும் பெரியவர்கள் சி. செசகராசசிங்கம், நந்தினி சேவியர், குப்பிழான் ஐ. சண்முகன், சி.சிவநேசன், கண எதிர்வீரசிங்கம் ஆகியோர் கலாபூஷணம் விருது பெற்றனர். விருதுபெற்ற பெரியவர்களுக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். (படங்கள் நன்றி - வதிரி சி. ரவீந்திரன், குமாரராசன்)

 சி. செசகராசசிங்கம் கலாபூஷணம் விருதுபெற்றபோது


கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம், 
மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் 
இருவரும் கலாபூஷணம் விருதுபெற்றபின்னர்.



 எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் மண்டபத்தில்  


அடங்காப்பிடாரி நாடகத்தின் மூலம் நன்கு அறியப்பட்ட சி. சிவநேசன் கலாபூஷணம் விருதுபெற்றபோது


 கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம் கலாபூஷணம் விருதுபெற்றபோது





புதன், அக்டோபர் 2

சாகித்திய ரத்னா விருது பெற்ற மூத்த எழுத்தாளர் தெணியான்



30.09.2013 இல் BMICH இல் நடைபெற்ற விருதுவழங்கல் நிகழ்வில் 'சாகித்திய ரத்னா' விருதினை மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்கள் பெற்றுக் கொண்டார்.  அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- சு. குணேஸ்வரன் 

சனி, ஏப்ரல் 6

ஒரு பாதையின் கதை - குப்பிழான் ஐ. சண்முகன்



குப்பிழான் ஐ. சண்முகனின் தேர்ந்த கதைகளின் தொகுதியாக "ஒரு பாதையின் கதை" நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய இணைப்பு

(1)
வாசிப்பு: ஒரு பாதையின் கதை
குப்பிழான் ஐ. சண்முகம் - போருக்கு முந்தைய வாழ்க்கை

நித்ய ஸந்யாஸ்

http://www.kalachuvadu.com/இதழ் 160

(2) /இளமைக்கேயுள்ள உள்ளக் கிளர்ச்சியையும், உணர்வுக் கொந்தளிப்பையும் கருப்பொருளாகக் கொண்ட சண்முகனின் கதைகள் ஏக்க உணர்வை கிளர்த்தும்படியாக அமைந்துவிட்டிருப்பவை இக்கதைகள்.

புதன், டிசம்பர் 19

நாடகக் கலைஞர் மா. அனந்தராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.



அல்வாய் என்ற எங்கள் சின்னக்கிராமத்தின் கலைஞர்கள் வரிசையில், எமது கிராமத்தில் முதல்முதல் 'கலாபூஷணம்' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ள (2012 டிசம்பர்) நாடகக் கலைஞர் மா. அனந்தராஜன் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தொடர்பான தகவலை முகநூலில் பகிர்ந்தபோது வாழ்த்தியவர்களின் கருத்துக்களையும் இணைத்துக் கொள்கிறேன்.

சு. குணேஸ்வரன்

Subramaniam Kuneswaran   முகநூலில்  இருந்து ....
இவ்வருடம் நாடகத்துறைக்காக கலாபூஷணம் விருதுபெறும் மா. அனந்தராசன் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் — with Priya Sritharan and 3 others.
2Like · ·
  • Thuva Arasan congratulations...
  • Niruthighan Nijathghan Congratulations.....................
  • Seena Uthayakumar என் அன்பான வாழ்த்துக்கள்.
  • Ehamparam Ravivarmah வாழ்த்துக்கள்
  • Yoga Thambirajah Anpulla Ananthu maamaavukku en manam niraintha paaraddukkal.
  • Rooby Singam raasavukku emathu ulamaartha vaalthukkal.
  • Subramaniam Kuneswaran உங்கள் வாழ்த்துக்களை அனந்தராசன் அவர்களுக்கு தெரிவித்திருக்கிறேன் நண்பர்களே.
  • Rajaji Rajagopalan அனந்தராசன் அவர்களைப் பற்றிய கலைத்துறை வரலாற்றையும் இங்கே சுருக்கமாகச் சொல்லுங்கள், நண்பரே. என்போன்றொர்க்கு உதவியாயிருக்கும்.
  • Arivon Naan தகுதியானவர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிப்பது நல்லதுதான்! ஆனால், கலாபூஷணம் - ஆளுநர் விருது போன்றவற்றுக்கு எழுத்தாளர் - கலைஞர் விண்ணப்பிக்கவேண்டி உள்ளமை இழிவான நிலைமையாகும். அதிலும், அந்த விண்ணப்பப் படிவத்தில் , 'இதற்கு நான் தகுதியானவன் ; எனவே, இவ்விருதை எனக்கு வழங்கவும்' என்ற பொருள்படச் சில வரிகள் உள்ளனவாம் . இவற்றை ஏற்றுக் கையெழுத்திட்டு விண்ணப்பிப்பவர்களிலிருந்தே 'கோட்டா ' முறையின்மூலம் தமிழர், முஸ்லிம்கள், வெவ்வேறு பிரதேசத்தவர் என்ற ரீதியில் "விருது"க்குத் தெரியப்படுகின்றனர். "கேட்டுப் பெறுவது பிச்சை ; அழைத்துத் தருவது விருந்து" என்று, கிழக்கு மாகாண முஸ்லிம் எழுத்தாளர் ஒருவர் முன்பு 'தினகரன் வாரமஞ்சரி'யில் கூறியுள்ளமை சிந்தனைக்குரியது!
  • Raguvaran Balakrishnan congratulations my dear friends
  • Yogarajan Rajaputhiran · 21 mutual friends
    திரு. அனந்தராசன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவரைப் பற்றி பல விடயங்கள் பேச இருக்கின்றோம். எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (16-12-2012) தென்றலில் காலை 9 மணிக்கு சந்தித்த வேளை நிகழ்ச்சியில் அதிதியாகக் கலந்துகொள்பவர் வேறு யாருமில்லை கலாபூஷணம் அனந்தராசன் அவர்களே….


 குமாரராஜன் அவர்களின் முகநூலில் இருந்து....


One of our artist Mr.M.Anantharasan receiving Kalabooshan award for Drama. Congratulation and keep it up while awaiting for much performance.