புதன், ஜனவரி 1

உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும் மானுடபாகமும் நூல் வெளியீடு





 புலவர்மணி கா. நீலகண்டன், செல்லத்துரை சுதர்சன் ஆகியோரைப் பதிப்பாளர்களாகக் கொண்டு வெளிவரும் “உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு” நூலின் வெளியீட்டு விழா 05.01.2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் வல்வை ந. அனந்தராஜ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

 நிகழ்வில் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, பேராசிரியர் கி. விசாகரூபன், பேராசிரியர். வ. மகேஸ்வரன் , பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் பூ. சோதிநாதன், அதிபர் சு. கிருஸ்ணகுமார், ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி இ. தில்லையம்பலம் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

 நிகழ்வில்; வைத்திய கலாநிதி ந. குகதாசன், பேராசிரியர் சி. சிறீசற்குணராசா, வைத்திய கலாநிதி பானு பிரசன்னா, விரிவுரையாளர் ந. சஞ்ஞீவன், பொறியியலாளர் நீ. நித்தியானந்தன், சிவப்பிரம்மசிறீ வைத்தியநாதக்குருக்கள், திருமதி தாரணி செல்வனேசன், யாழ் பிரதம நூலகர் திருமதி இமெல்டா கருணாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

 19 ஆம் நூற்றாண்டில் ஈழத்தின் பெரும்புலவராகத் திகழ்ந்த உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் படைப்புக்களைக் கொண்ட பெருந்திரட்டாக வெளியிடப்படும் இந்நிகழ்வு வடமராட்சிப் புலமைப் பாரம்பரியத்தின் பெருமையை அறிவதற்கு ஒரு ஆவணமாகத் திகழ்கின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக