ஞாயிறு, ஜனவரி 15

எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது



2011 ஆம் ஆண்டுக்கான இயல் விருது இம்முறை எஸ். ராமகிருஸ்ணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழின் மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவராக எஸ்.ரா அவர்கள் இருந்து வருகிறார். சிறுகதை, நாவல், விமர்சனம், திரைப்படம், உலக இலக்கியம் என தனது ஆளுமையைப் பதித்து வருகிறார்.

அண்மையில் அவர் உலக இலக்கியம் பற்றி 7 நாட்கள் தமிழகத்தில் நிகழ்த்திய உரை ஒலிவடிவமாக வந்துள்ளது. 'குறுங்கதை' என்ற இலக்கிய வடிவம் பற்றி தமிழ்ச்சூழலில் யாருமே பெரிதும் அலட்டிக் கொள்ளாத நிலையில் அண்மையில், தான் எழுதிய 50 குறுங்கதைகளை 'நகுலன் வீட்டில் யாரும் இல்லை' என்ற தொகுப்பாகத் தந்திருக்கிறார்.

அவருடைய எழுத்துக்களைப் போலவே அவரது உரையாடலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. எனது வலைப்பதிவில் சில மாதங்களுக்கு முன்னர் கூட ஒரு நேர்காணலைப் பகிர்ந்திருந்தேன்.

இம்மாதம் வெளிவரவிருக்கும் எனது தொகுப்பு நூல் ஒன்றுக்காக (கதை கதையாம்...- தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) எஸ். ராவின் 4 குறுங்கதைகளை இணைத்துக் கொள்வதற்கு அனுமதி கேட்டிருந்தபோது மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருந்தார்.

இயல் விருது கிடைக்கும் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. எஸ்.ரா அவர்களுக்கு இந்தச் சிறியவனின் அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சு.குணேஸ்வரன்

மேலும் வாசிக்க :-அ. முத்துலிங்த்தின் தளத்தில் இயல்விருதுச் செய்தி

2 கருத்துகள்: