திங்கள், ஆகஸ்ட் 29

நந்தினி சேவியரின் புதிய சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.




நெல்லிமரப் பள்ளிக்கூடம்

எழுத்தாளர் நந்தினி சேவியரின் ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. கொடகே சகோதரர்களால் வெளியிடப்பட்ட இந்நூலைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
நூலின் விலை 350

Mail Support By
VASTEC Technologies (pvt)Ltd.
#65,Station Road,
Vavuniya
Srilanka
024-2222869
024-2221412
mail@vastec.org
www.vastec.org

அல்லது
nanthiny xavier
269,N.C Road
Trincomalee.
T.P 0771495629

நூல் பற்றிய மேலதிக இணைப்பு





3 கருத்துகள்:

  1. துவாரகன், நந்தினி சேவியர் என்றுவிட்டு யாரோ ஒரு ஆணின் புகைப்படத்தை பின்னட்டையில் போட்டுள்ளார்களே! படத்திலிருப்பது நந்தினி சேவியரின் கணவனின் புகைப்படமா?
    ஆணாதிக்கம் எங்கெல்லாமோ தலைகாட்டுகிறதே?

    பதிலளிநீக்கு
  2. அது நந்தினிசேவியரேதான்.

    பதிலளிநீக்கு
  3. சேவியர் யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருகோணமலையில் வசிக்கிறார். கலை இலக்கியத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.
    பாடசாலைக்கல்வியை மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை,சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பின்னர் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார். சிறுகதைத்துறையிலேயே நன்கு அறியப்பட்டவர். நந்தினி சேவியர் என்ற பெயரிலேயே அதிகமும் எழுதிவருகிறார். இவருடைய பத்தி எழுத்துக்கள் மற்றும் கட்டுரைகள் சில வ.தேவசகாயம், தாவீது கிறிஸ்ரோ ஆகிய பெயர்களிலும் வெளிவந்துள்ளன.
    நாவல்கள் குறுநாவல்கள் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் ஆகியவற்றை எழுதியிருந்தாலும் அவை இன்னமும் நூல்வடிவம் பெறவில்லை. இவரின் சிறுகதைகள் மாத்திரமே இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
    இவருடைய படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி,சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.
    இலங்கை வடமாகாண கல்வி அமைச்சு கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கு இவர் செய்த பங்களிப்பு முக்கியமானது.
    மேகங்கள், கடற்கரையில் தென்னை மரங்கள் நிற்கின்றன ஆகிய நாவல்களையும் ஒரு வயதுபோன மனிதரின் வாரிசுகள் என்ற குறுநாவலையும் எழுதியுள்ளார்

    பதிலளிநீக்கு