ஞாயிறு, மார்ச் 11

எழுத்தாளர் ஆனந்தமயில் காலமானார்.


எங்கள் காலத்தில் வாழ்ந்த அற்புதமான கதைசொல்லி. அவரது "ஓர் எழுதுவினைஞனின் டயரி" சிறுகதைத் தொகுப்பு ஒன்றே போதும் அவரின் பெயர் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்க.


எழுத்தாளர் ஆனந்தமயில் ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். 12 சிறுகதைகள் கொண்ட ‘ஒரு எழுதுவினைஞனின் டயறி’ என்ற தொகுப்பினூடாகவே இன்று பலருக்கும் அறிமுகமானவர். 70 களில் எழுத்துலகில் அறிமுகமானவர். துரதிஸ்டவசமாக அவரின் படைப்புக்கள் அப்போது நூலுருப்பெறாத காரணத்தினால் இலக்கிய உலகில் பேசப்படாமல் மறைக்கப்பட்டிருந்தார். வீரகேசரி, மல்லிகை, சமர், அலை முதலான ஏடுகளில் அவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.


மண்ணின் பதிவாக, உயிரோட்டமான வாழ்வின் பதிவாக அவரது பல கதைகள் உள்ளன. குறிப்பாக ‘முருகைக்கற்பூக்கள்’ என்ற சிறுகதை கடற்பிரதேச வாழ்வினைப் பதிவு செய்யும் ஈழத்துக் கதைகளில் முக்கியமானதாக அமைந்திருக்கின்றது.


மறைந்த ஆனந்தமயில் அவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம்.

-சு.குணேஸ்வரன்2 கருத்துகள்:

 1. facebook பதிவுகளில் இருந்து....

  Thevarasa Mukunthan ஒரு தரமான படைப்பாளின் மறைவால் துயருறுகிறேன் . நித்திலனுக்கும் திவ்யனுக்கும் ஏனையோருக்கும் அனுதாபங்கள்
  17 hours ago · Unlike · 2

  Vathiri C Raveendran எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கவும்
  16 hours ago · Unlike · 2

  Gnanamuthu Paul Antony our deepest sympathiesto all the members of the family.
  7 hours ago · Like

  Thenusha Logeswaran ஈடு செய்ய முடியாத இழப்பு...ஆழ்ந்த அனுதாபங்கள்்...
  18 minutes ago · Like

  Share

  16 hours agoVathiri C Raveendran
  எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கவும்

  14 hours agoMullai Amuthan
  எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்ளுங்கள்.

  2 hours agoMemon Kavi
  எழுத்தாளர் ஆனந்தமயில் அவர்களின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு எமது அஞ்சலியை சமர்பியுங்கள்

  பதிலளிநீக்கு
 2. on facebook...

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan
  மிகச் சிறந்த படைப்பாளி. மிகவும் இரசித்து அவை பற்றி எழுதவும் செய்துள்ளேன். அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
  Monday at 22:49 · Unlike · 2

  Farveen Mohamed
  அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
  Yesterday at 11:02 · Like

  Raguvaran Balakrishnan
  my deep condolances to his family.his 04 short storieswonderful.world standard.we lost our best artist

  பதிலளிநீக்கு