செவ்வாய், ஜூன் 6

ஊடறு நூல்கள் அறிமுகமும் உரையாடலும்

 

ஊடறு நூல்கள் வெளியீடு

கோ. ந. மீனாட்சியம்மாள் படைப்புகள், சங்கமி ஆகிய நூல்களின் வெளியீடும் மலையகம் 200 கடந்த காலமும் நிகழ்காலமும் உரையாடலும் 11.06.2023 அன்று 3.00 மணிக்கு யாழ். மத்தியகல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் கலாநிதி சு. குணேஸ்வரன் தலைமையில் நடைபெறும். நிகழ்வில் எம்.எம். ஜெயசீலன், உ. ஜெயலட்சுமி, ச. சத்தியதேவன், சி. ரமேஸ், ஷப்னா இக்பால் ஆகியோர் உரை நிகழ்த்துவர்.


வெள்ளி, ஜனவரி 27

இலக்கியவெளி

 



இலக்கியவெளி 3ஆவது இதழ் சிறுகதைச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. இலங்கையிலிருந்து ரிஷான் ஷெரீப், லறீனா அப்துல் ஹக், சாந்தன், தாட்சாயணி, யோகேஸ்வரி சிவப்பிரகாசம் ஆகியோரும் புகலிடத்திலிருந்து பொ.கருணாகரமூர்த்தி, தேவகாந்தன் ஆகியோரும் தமிழகத்திலிருந்து சு.வேணுகோபால், எம். ஏ.சுசீலா ஆகியோரும் சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள். சிறுகதைகள் தொடர்பாக துறைசார்ந்தோரின் கட்டுரைகள் மற்றும் ஏனைய படைப்புக்களுடன் அதிக பக்கங்களில் (240 பக்கங்கள்) இதழ் வெளியாகியுள்ளது. அகில் சாம்பசிவத்தின் கடின உழைப்பு இதழில் தெரிகிறது