எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் ஒக்டோபர் 14,15,16 இல் மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் தமிழ் இலக்கிய விழாவில் கிழக்குமாகாண முதலமைச்சர் விருது பெறுகிறார்
.
எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் ஒக்டோபர் 7,8 இல் மன்னாரில் நடைபெறவிருக்கும் தமிழ் இலக்கிய விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் விருது பெறுகிறார்.
ஈழத்தமிழ்ப் புனைகதைத்துறையில் தவிர்க்கமுடியாத படைப்பாளிகளாக விளங்கும் இரண்டு இலக்கிய ஆளுமைகளுடனும் மிக நெருக்கமான இலக்கிய நட்பினைப் பேணி வருபவர்களில் நானும் ஒருவன்.
ஆரோக்கியமான வழிகாட்டலை எப்போதும் வழங்கும் இரண்டு இலக்கிய ஆளுமைகளுக்கும் கிடைக்கும் கெளரவத்தை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
இருவருக்கும் அன்புநிறை வாழ்த்துக்கள்.
முகநூலில் இருந்து....
பதிலளிநீக்குNadchathran Chev-Inthiyan, Kanthavarothayan Murugesu, மன்னார் அமுதன் and 5 others like this.
View 1 share
மன்னார் அமுதன் வாழ்த்துக்கள்... நந்தினி சேவியர் ஐயா, வாழ்த்துக்கள் குப்பிழான் ஐ. சண்முகன் ஐயா
Yesterday at 18:33 · Like
Ponniah Karunaharamoorthy விருதுகள் யார்கொடுத்தாலும் வாங்குவார்களா? ஜே. ஆர். வழங்கவிருந்த சாகித்தியமண்டலப்பரிசை நிராகரித்த அ. யேசுராஜா இன்னமும் அங்குதான் வாழ்கிறார்.
Yesterday at 20:32 · Like · 1 person
Tharani Ganeshananthan நந்தினி சேவியர் , முற்போக்காளருள் முற்போக்காளர்
21 hours ago · Like
Thevarasa Mukunthan அ யேசுராசாவுக்கு 1974 இல் வெளியான அவரின் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் எனற சிறுகதைத் தொகுதிக்காக 1975 இல் இலங்கை அரசின் சாகித்திய விருது கிடைத்தது. அப்போது அவருக்கு வயது 29 .
2005 ஆம் ஆண்டு இலங்கை அரசு திரு அ யேசுராசாவுக்கு இலங்கை அரசு, தேசத்தின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான கலா கீர்த்தி எனும் விருதை வழங்கியது. அதனை அவர் ஏற்க மறுத்தார். தமிழர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தும் சிங்கள அரசின் விருதை மறுத்து அவர் எழுதியுள்ள மடலின் நகல் கீழே தரப்பட்டுள்ளது:
//கலை இலக்கியத் துறையில் செயற்பட்டுவருபவனாகிய எனக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் "கலா கீர்த்தி" விருது வழங்கப்பட உள்ளதைத் தெரிவிக்கும் கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதற்காக முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயினும் "இரணடாந்தரப் பிரஜை" என்ற உணர்வுடனேயே இந்நாட்டில் வாழத் தொடர்ந்து நிர்பந்திக்கப் பட்டுவரும் தமிழ் மக்களில் ஒருவன் என்ற வகையில், கசப்பான இந்த யதார்த்த நிலை மீது கவனததைக் குவியச் செய்யும் பொருட்டு, "கலா கீர்த்தி" விருதினைப் பெற்றக் கொள்வதில் எனது விருப்பமின்மையைத் தெரிவிக்கிறேன்.
இனங்களுக்கிடையில் சமத்துவ நிலைமை பல தளங்களில் இருந்து வருவதுதான். இன்று இலங்கையில் நாமெல்லோரும் எதிர் கொள்ளும் அவலமான நெருக்கடிகளின் அடிப்படை என்பது எல்லோராலும் உணரப்பட வேண்டும். அந்த நிலைமையை மாற்றுவதற்குரிய நேர்மையான - வெளிப்படையான செயற்பாடுகளே இக்காலக்கட்டத்தில் இன்றியமையாதனவாய் உள்ளன. இனப்பாரபட்ச நடவடிக்கைகள் - நிலைமைகள் பற்றிய விரிவான விளக்கங்களைத் தவிர்க்கிறேன். எனினும், தங்களின் விருது பற்றிய அறிவிப்புக் கடிதங்கூட எனது தாய்மொழியான தமிழில் அமைந்திருக்கவில்லை என்பதைக் கவலையுடன் அறியத்தருகிறேன்.
தமது மேலான நோக்கங்களின் பொருட்டு, அரசின் உயர் விருதுகளை முன்பு ஏற்றுக் கொள்ள மறுத்த சகோதர சிங்களக் கலைஞர்களான பிரசன்ன விதானகே, அசோகா ஹந்தகம ஆகியோரின் முன்னுதாரணத்தை இவ்வேளையில் மதிப்புடன் நினைவு கருதுகிறேன்.
//
நன்றி : தென் ஆசியச் செய்தி - 1-15 டிசம்பர் 2006
2 hours ago · Unlike · 1 person
Subramaniam Kuneswaran விருதுகள் பரிசுகளால் யாரும் மேன்மையுறுவதில்லை. மனிதர்கள் மனிதர்களாக வாழ்வதால்தான் மேன்மையுறுகிறார்கள். ஆனால் சில விருதுகள் பரிசுகள் தரமான படைப்புக்களை இனங்காட்டுகின்றன. படைப்பாளியை முன்னிறுத்துகின்றன என்ற வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒருசிலரின் நேர்மையீனம்தான் எல்லாவற்றையும் கேலிக்கூத்தாக்குகின்றன. யேசுராசா மட்டுமல்ல குப்பிழான் ஐ. சண்முகன், நந்தினி சேவியர் ஆகியோர் தங்கள் படைப்புக்களால் தங்களை நேர்மையானவர்களாக இனங்காட்டியவர்கள்தான்.
40 minutes ago · Like · 1 person